© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மே 31ஆம் நாள் மாலை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் நாடுகளைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று, சீனாவின் ஹெ நான் மாநிலத்தின் சின் யாங் நகரத்தின் லோ சன் மாவட்டத்தின் டொங் சே தேசிய இயற்கை புகலிடத்தில் பயணம் மேற்கொண்டது. இப்பணயத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், சீனப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசித்து, அன்றில் பறவைகளின் வாழ்க்கை குறித்து அறிந்து கொண்டனர்.
இப்புகலிடத்திலுள்ள பண்பாட்டுக் காட்சியிடத்தில், சீனத் தேசிய நிலை பொருள் சாரா மரபுச் செல்வமான லோ சன் தோற்பாவைக் கூத்தும் சர்வதேச இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டொங் சே தேசிய இயற்கைப் புகலிடம், பறவைகளின் சொர்க்கம் என்றழைக்கப்படுகின்றது. 46 ஆயிரத்து 800 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இப்புகலிடத்தில் 334 வகை பறவைகள் வாழ்கின்றன. பே யுங் பாதுகாப்புத் தளம், டொங் சே இயற்கை புகலிடத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் மிக அரிதான பறவையான அன்றில் பறவை இங்கு தான் வாழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.